728x90 AdSpace

  • Latest News

    Saturday, March 24, 2018

    எடையை குறைக்கணும்னு முடிவ பண்ணிட்டீங்களா?... அப்போ காலையில இத சாப்பிடுங்க...



    பரபரப்பான இந்த நவீன காலத்தில், காலை உணவை பெரும்பாலானோர் தவிர்த்து வருகிறார்கள். ஒரு நாள் முழுவதும் நம்மை உற்சாகமாக வைத்துக் கொள்ள, காலை உணவு மிக முக்கியமானது. 

    உடல் எடையை குறைக்க நினைப்பவர்களும் காலை உணவை கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்.


    உடல் எடை குறைப்பு

    உடல் எடை குறைப்பு மிக சரியான பாதையில் துவங்கினால், ஆரோக்கியமான சத்துமிக்க காலை உணவு உங்கள் எடைகளை குறைக்க உதவும். உடனே எந்த விதமான காலை உணவைஎடுத்துக்கொண்டாலும் உடல் எடை குறையும் என தட்டையாக புரிந்துக்கொள்ள கூடாது. சத்துமிக்க உணவுகளை உட்கொண்டால் மட்டுமே எடையை குறைக்கமுடியும்.

    காலை உணவுகள்

    காலை உணவுகள் இந்திய காலை உணவுகளை நாம் ஒரு குறுகிய வட்டத்துக்குள்கொண்டு வரவே முடியாது. அதன் பரப்பு ஏராளம். காய்கறி, மூலிகைகள், பீன்ஸ், மசாலாக்கள் என பலவற்றையும் உள்ளடக்கியது. உங்கள் உடல் எடை குறைப்பு லட்சியத்தை படிப்படியாக எட்ட வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், குறைந்த கலோரி உள்ள மிகசரியான உணவை தேர்ந்தெடுக்க வேண்டியது மிக அவசியமானதாகும். சரியாக எந்த உணவை எடுத்துக் கொண்டால் உடல் எடையை குறைக்கலாம் என்பதை கீழே விளக்கி உள்ளோம்.


    கலோரியில் கவனம்

    கலோரியில் கவனம் உடல் எடையை நீங்கள் குறைக்க நினைத்தால், தினமும் எவ்வளவு கலோரிகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை நீங்கள் முதலிலே கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். உடல் எடை குறைப்பில் நீங்கள் ஈடுபட்டால், சராசரியாக ஒருநாள் உங்களுக்கு 1200 முதல் 1800 எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றை ஒரே நேரமாக எடுத்துக்கொள்ளாமல் மூன்று வேளையாக பிரித்து எடுக்கலாம். மாலை வேளைகளில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் நொறுக்குத் தீனிக்களுக்காக 100 முதல் 200 கலோரிகளை ஒதுக்கிக்கொள்ளலாம். உடல் எடையை குறைக்க, காலை உணவு சுமார் 350 முதல் 550 கலோரிக்களை கொண்டிருக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக இதைப்பற்றி உங்கள் குடும்ப மருத்துவரிடம் இதைப்பற்றி ஆலோசனை கேட்பது நன்று.


    புரோட்டீன் உணவுகள்

    புரோட்டீன் உணவுகள் உங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், காலை உணவாக ஒரு புரதசத்து மிகுதியான உணவை எடுத்துக்கொள்ளுங்கள். புரதசத்து மிகுதியான உணவுகள், கார்போஹைட்ரேட் உணவுகளை விட அதிக திருப்தியையும், கொழுப்புகளை எரிக்கவும் உதவும். முட்டைகளில் உள்ள வெள்ளைகரு 17 கலோரிகளையும், மஞ்சள்கரு 100 கலோரிகளையும், குறைவான கொழுப்புள்ள சீஸ் கட்டிகள் 82 கலோரிகளையும், சோயா தயிர்(டோஃபூ) 46 கலோரிகளையும் கொண்டுள்ளது. எனவே உடல் எடையை குறைப்பவர்கள், இதுபோன்ற புரதசத்து மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

    நார்ச்சத்து மிகுந்த உணவுகள்

    நார்ச்சத்து மிகுந்த உணவுகள் நார்சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது, வயிறு நிறைந்த உணர்வையும், திருப்தியையும் எளிதாக அடையலாம். ஆப்பிள், தக்காளி, ஸ்ட்ராபரி போன்ற பழங்களிலும், பாதாம் மற்றும் சிறுதானிய உணவுகளில் நிறைய நார்சத்து இருப்பதால், அவற்றை காலை உணவாக எடுப்பதால் எந்த சிக்கலும் வராது. அவகாடோ மற்றும் விதைகளில் போன்றவைகளில் நார்சத்து மிகுந்து இருக்கிறது.

    ஹெல்த்தி பிரேக்ஃபாஸ்ட் ஐடியா 1

    ஹெல்த்தி பிரேக்ஃபாஸ்ட் ஐடியா 1 உங்கள் உடல் எடையை மிக சீக்கிரமாக குறைக்க விரும்பினால், காலை உணவாக புரதச்சத்து மற்றும் நார்சத்து மிகுந்த உணவுகளை சேர்த்து உண்ணலாம். எடுத்துக்காட்டாக, குறைவான கொழுப்புடைய பாலுடன் நார்ச்சத்து மிகுந்த தானியங்களையும், ஸ்ட்ராபெரி அல்லது பாதாமுடன் சேர்த்து உண்ணலாம்.

    ஐடியா 2

    ஐடியா 2 தயிரை ஓட்ஸ் மற்றும் ஆப்பிளுடன் சேர்த்து சாப்பிடலாம். கோதுமை ரொட்டிகளுடன், காய்கறி குழம்பு மற்றும் குறைவான பாலோடு சேர்த்து உண்ணலாம்.

    ஐடியா 3

    ஐடியா 3 உங்களுக்கு லாக்டோஸ் குறைப்பாடு இருந்தால், ஸ்ட்ராபெரி தயிர், பாதாம், கீரை போன்றவற்றை சேர்த்து புரதசத்து மிகுந்த 'ஸ்மூத்தி' செய்து குடிக்கலாம்.

    ஐடியா 4

    ஐடியா 4 காலை நேரங்களில், உங்களுக்கு வாய்ப்பிருந்தால் பாரம்பரிய உணவுகளை நீங்கள் தயாரித்து உண்ணலாம். உதாரணமாக வாழைப்பழத்தோடு தேன் சேர்த்தோ, ஓட்சுடன் தேன் சேர்த்தோ உண்ணலாம். உடல் எடை குறைப்புக்கு மேலே உள்ளவை மிக தரமான உணவுகளாகும். மிக குறைவான அளவில் இட்லி, தோசை, உப்புமா போன்றவற்றையும் எடுத்துக்கொள்ளலாம்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: எடையை குறைக்கணும்னு முடிவ பண்ணிட்டீங்களா?... அப்போ காலையில இத சாப்பிடுங்க... Rating: 5 Reviewed By: Muslim Vanoli
    Scroll to Top