728x90 AdSpace

  • Latest News

    Saturday, March 24, 2018

    இறக்குமதி செய்யப்பட்ட பால்மா விலை அதிகரிப்பு தொடர்பில் விரைவில் தீர்மானம்...!



    இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

    பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு பால்மா இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக வாழ்க்கைச் செலவு குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    ஒரு கிலோகிராம் பால்மாவின் தற்போதைய அதிகபட்ச விலை 810 ரூபாவாகும்.

    இந்நிலையில் பால்மா விலையேற்ற கோரிக்கை தொடர்பாக நுகர்வோர் விவகார அதிகார சபை எதிர்ப்பு வௌியிட்டுள்ளது.

    இதற்கிணங்க பால்மா இறக்குமதியாளர்கள் மற்றும் விடயம் தொடர்பான தரப்பினருடன் கலந்துரையாடி அடுத்த வாரமளவில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என நேற்று கூடிய வாழக்கை செலவு குழு தீர்மானித்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இறக்குமதி செய்யப்பட்ட பால்மா விலை அதிகரிப்பு தொடர்பில் விரைவில் தீர்மானம்...! Rating: 5 Reviewed By: Muslim Vanoli
    Scroll to Top