728x90 AdSpace

  • Latest News

    Saturday, March 24, 2018

    ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல் திருட்டு: கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தில் சோதனை...!



    இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தில் சோதனைகள் நடத்த அந்நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தியுள்ளனர்.

    கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்னும் நிறுவனம் தங்கள் அரசியல் வாடிக்கையாளர்களுக்காக ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    அமெரிக்க அதிபர் தேர்தலின்போது ட்ரம்பை ஆதரிக்கும் வகையில் இந்த நிறுவனம் ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்களை சட்டவிரோதமாகப் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் ஃபேஸ்புக் நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்து அதன் மதிப்பு சரிய ஆரம்பித்தது.

    ஃபேஸ்புக் இழைத்த தவறால், கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்களைப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது என ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஷக்கர்பேர்க் ஒப்புக்கொண்டுள்ளார்.

    இதற்கிடையே, ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டது தொடர்பான முறைப்பாடுகளுக்கு விளக்கம் அளிக்கும்படி கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்திற்கு மத்திய அரசு நேற்று (23) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல் திருட்டு: கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தில் சோதனை...! Rating: 5 Reviewed By: Muslim Vanoli
    Scroll to Top